Webdunia - Bharat's app for daily news and videos

Install App

74 வயதில் இரட்டைகுழந்தை பெற்ற பெண்... உலக சாதனை அங்கீகாரம்?

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2019 (14:55 IST)
உலகிலேயே அதிக வயதில் கருத்தரித்த பெண் என்ற சாதனையை ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மங்கையம்மா என்ற மூதாட்டி பெற்றுள்ளார். அவரது 74 வயதில் இரட்டைக் குழந்தைகளை பெற்று இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்காக உலக சாதனை அங்கீகாரம அவருக்கு கிடைக்க வாய்புள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளா நெல்லபார்திபடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (80). இவரது மனைவி இராமட்டி மங்கையம்மா ஆவார். இந்த தம்பதியர் 1962 ஆண்டு மார்சி 22 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். ஆனால் குழந்தைபேறு இல்லை. அதனால் பவேறு மருத்துவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெற்றும்,அவர்களுக்கும் இந்த பிரச்சனை சரியாக வில்லை எனத் தெரிகிறது.
 
இந்நிலையில் இவர்களது அருகில் வசிக்கும் பெண்மணி ஒருவருக்கு குழந்தையிலாத போது, ( In vitro fertilisation( IVF) இன் விட்ரோ கருத்தரித்தல் முறையில் கர்பமாகி குழந்தையைப் பெற்றெடுத்தார். அதனைப்பார்த்த மங்கையம்மாவுக்கு ஆசை வந்தது, ஆனால் அவருக்கு மொனோபஸ் என்ற மாதவிடாய் நின்ரு 25 வருடம் ஆகிவிட்டது.

இருப்பினும் கணவரிடம் கூறி  ஆந்திரமாநிலம் , கோதப்பேட்டையில் உள்ளா அகல்யா மருத்துவ மனைக்கு சென்று மருத்துவர் சனக்காயலா  உமாசங்கரிட  கலந்து ஆலோசித்துள்ளார். அதன்படி மொனோபஸ் நின்று 25 ஆண்டுகள் கழித்து இவரிடம் கருமுட்டைகள் உற்பத்திதிறன் இல்லாததால் அதை வேறுஒரிவரிடம் வாங்கி , தன் கணவரின் விந்தணுவைப் பெற்று இன்று காலை 10: 30 மணி அளவில் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார்.
 
இது அரிய வகையான மருத்துவம் என்றும் மங்கையம்மாவிடம் இருந்த மன உறுதியும்தான் இந்த வயதான காலத்திலும் கூட திருமணமாகி 57 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் குழந்தை பெற காரணம். சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு தாயும் இரு குழந்தைகளு ஆரோக்கியமாக உள்ளதாக  மருத்துவர் உமாசங்கர் கூறியுள்ளார். 
 
உலகிலே அதிக வயதில்  இந்த இன் விட்ரோ கருத்தரித்தல் முறையில் குழந்த பெற்றவர் என்ற சாதனையை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த டலிஞ்சர் கரூர் என்பவர் ( 2016 ஆம்ஆண்டு ) பெற்றிருந்தார். தற்போது அந்த  சாதனையை மங்கையம்மா இன்று முறியடித்துள்ளார். அவருக்கு எல்ல்லொரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments