Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9,11 வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல்பாஸ்: மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (20:41 IST)
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 11ஆன் வகுப்பு வரை தேர்வு இன்றி அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனாவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 9, 11 ஆகிய வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ளது
 
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும் சரிவர மாணவர்களுக்கு பாடங்கள் புரியவில்லை என்று கூறப்பட்டது
 
இதன் காரணத்தினால் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி என மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1முதல் 8ம் வகுப்பு வரையான அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு இன்று தேர்ச்சி பெறுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே தேர்வு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஒரு மாணவியின் பதிவு காரணமாக தேசிய நலனே பாதிக்கப்பட்டுவிடுமா? நீதிமன்றம் சரமாரி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments