Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,927 பேர்களுக்கு கொரோனா!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (22:03 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 9,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,38,398 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 56 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52,556 ஆக அதிகரித்துள்ளது என்றும், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 12,182 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது 95,322 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 20,89,294 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

கோமாவில் இருந்த நபர் திடீரென எழுந்து நடந்ததால் டாக்டர்கள் அதிர்ச்சி..!

வினாத்தாள் கசிவு எதிரொலி: 12-ம் வகுப்பு ஆங்கிலம் தேர்வு ரத்து.. அதிரடி நடவடிக்கை..!

தி.மு.க.வை வெளிப்படையாக விமர்சித்து மகளிர் தின வாழ்த்து: விஜய் வீடியோ வைரல்..!

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments