Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனநோயாளி கையில் கத்தி - 8 வயது சிறுவன் பலி

மனநோயாளி கையில் கத்தி -  8 வயது சிறுவன் பலி
, வெள்ளி, 14 ஜூலை 2017 (17:03 IST)
கேரளாவில் மன நோயாளி ஒருவர், சிறுவனை கத்தியால் குத்தியதால், அந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மடவூர் பகுதியில் உள்ள ஒரு உயர் நிலைப்பள்ளி உள்ளது. அங்கு வழக்கம் போல் இன்று காலை மானவர்கள் பள்ளி வந்து வண்ணம் இருந்தனர்.
 
அப்போது, அங்கு திடீரெனெ வந்த ஒரு நபர், தன் கையில் வைத்திருந்த கைத்தியால், 13 வயது மதிக்கத்தக்க 8ம் வகுப்பு மாணவனை சராமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அந்த மாணவன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஓப்படைத்தனர்.
 
விசாரணையில் அவர் மனநிலை சரியில்லாதவர் போல் அந்த பகுதியில் சுற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், செல்லும் வழியிலேயே மரணமடைந்தான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்- விமர்சனம்