திரிபுரா மாநிலத்தில் 828 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எச்ஐவி தோற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	உலகின் மிகக் கொடிய நோய்களில் ஒன்று ஹெச்ஐவி என்பதும் இதற்கு இன்னும் முழுமையாக குணமாகும் வகையில் மறந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் தெரிந்தது.
	 
	உலகம் முழுவதும் சுமார் 25 லட்சம் பேர் ஹெச்ஐவி தோற்று பாதிப்புடன் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் திரிபுரா மாநிலத்தில் மட்டும் 828 பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்ஐவி தோற்று ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
	 
	திரிபுரா மாநிலத்தில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சமீபத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடத்திய சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.
	 
	மாணவர்கள் பலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும் ஹெச்ஐவி தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்த ஊசியை பயன்படுத்தியதால் தான் பெரும்பாலான பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்ஐவி தொற்றுப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.