சண்கரில் இருக்கும் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் 100 ரூபாய் திருட்டு குற்றத்திற்காக வந்த இளைஞர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்டிகரில் இருக்கும் போலீஸ் நிலையம் ஒன்றிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அழைப்பில் ஆட்டோ டிரைவர் ஒருவர் மூன்று பேர் என்னிடம் வழிபறி செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
ஆட்டோ டிரைவர் கூறிய அடையாளங்களை வைத்து நெஹி என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை கேட்டு குற்றவாளி நீதிமன்றத்திலேயே கதறி அழுதுள்ளார்.
100 ரூபாய் திருடியதற்கு 8 ஆண்டுகள் சிறை மற்றும் 3000 ரூபாய் அபராதமும் கட்டும்படி நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், உடனடியாக நெஹியை சிறையில் அடைக்கும்படி உத்தவிட்டார். 21 வயதேயான அந்த இளைஞர் தீர்ப்பை கேட்டதும் கதறி அழுது புலம்பியுள்ளார்.
ஆனால், நீதிபதி தீர்ப்பை மாற்றியமைக்க மறுத்துவிட்டார். மேலும், திருட்டில் ஈடுபட்ட இரண்டும் பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.