Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் 7000ஐ நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (21:22 IST)
தமிழகம் மட்டுமின்றி தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 7000ஐ நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கர்நாடகாவில் இன்று புதிதாக 6,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உருவாகியுள்ளதாகவும் இன்று மட்டும் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் கர்நாடக மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 33 ஆயிரத்து 560 எனவும் மொத்த பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 ஆக உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று மட்டும் 2796 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தற்போது சுமார் 50,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் இருப்பதாகவும் அவர்களில் 393 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments