Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் ஆட்டத்தை பார்த்து தீக்குளித்த முதியவர்!

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (14:21 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் அவுட் ஆனதால் 65வயது ரசிகர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் வெளியேறினார்.
 
இதனால் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாபுலால் பைரவா(65) என்பவர் சோகம் தாங்க முடியாமல் தீக்குளித்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாபுலால் பைரவா காயங்களுடன் உயிர் பிழைத்தார். தீக்குளித்த விவகாரம் குறித்து விசாரித்த காவல்துறையினரிடம் பாபுலால் கூறியதாவது:-
 
நான் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்தேன். வீட்டில் யாரும் இல்லை. கோலி அவுட் ஆனதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதான் தீக்குளித்தேன் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட போலீஸார் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் பிரதமரை சந்திக்கும் ஈபிஎஸ் -ஓபிஎஸ்.. இணைப்பு நடக்குமா?

சொன்னீங்களே.. செஞ்சீங்களா? திமுக ஆட்சியை கேலி செய்து அதிமுக ஏற்பாடு செய்த வில்லுப்பாட்டு..!

இங்கிலாந்து டீக்கடைக்கு சென்ற பிரதமர் மோடி.. இந்திய தேயிலையில் தயாரித்த டீ..!

ஆகஸ்ட் 2ஆம் தேதி பூமி இருளில் மூழ்குமா? வேகமாக பரவி வரும் வதந்திக்கு நாசா விளக்கம்..!

சிறையில் இருந்து தப்பிய கற்பழிப்பு குற்றவாளி.. ஒளிய நினைத்து கிணற்றில் விழுந்த பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments