வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருமாறி இருக்கும் நிலையில் இந்த புயலுக்கு ஜாவத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த புயல் காரணமாக இந்தியாவில் 65 ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டணம் வழியாக செல்லும் 65 ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு கடற்கரை ரயில்வே அறிவித்துள்ளது
அதேபோல் ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது
ஜாவத் புயல் இன்று வடக்கு கடலோர பகுதியான ஆந்திரா மற்றும் தெற்கு கடலோர பகுதியான ஒடிசா ஆகிய பகுதிகளில் கரையை கடக்கும் என்றும் அதன் காரணமாக அந்த பகுதியில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது