சென்னையிலும் விரைவில் 5 ஜி சேவை - ஆகாஷ் அம்பானி

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (22:30 IST)
இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமான ஜியோ  நிறுவனத்தின்  தலைவர் ஆகாஷ் அம்பானி சென்னையில் 5 ஜி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் 5ஜி சேவையை தொடங்க முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி நெட்வொர்க் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்தன.

சமீபத்தில், தசரா கொண்டாடத்தின்போது, இந்தியாவின் 4 நகரங்களில் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் சோதனை அடிப்படையிலான 5ஜி பீட்டா சேவைகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் ராஜஸ்தான் மா  நிலத்தில் அறிமுகம் செய்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆகாஷ் அம்பானி, 5ஜி சேவை இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் மற்றும் ஒவ்வொரு அமைப்புக்கும் கிடைக்க  வேண்டும் என்று கூறினார். இந்த  நிலையில் இன்னும் பட   நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தவுள்ளது இதில் சென்னையில் உள்ளது  எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.. தேர்தல் ஆணையர்..!

பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு.. எத்தனை கட்டம்? தேர்தல் முடிவு தேதி உள்பட முழு விவரங்கள்..!

தவெக மீது சில தவறுகள் இருந்தாலும் விஜய்யை குற்றவாளியாக்க கூடாது: அண்ணாமலை பேட்டி..!

ரூ.249 ரீசார்ஜ் ப்ளானை நீக்கிய வோடபோன் ஐடியா.. அதுக்கு பதிலா? - பயனர்கள் அதிருப்தி!

காலாண்டு முடிந்து வந்த மத்திய கல்வி நிதி! மாணவர் சேர்க்கை அறிவித்த தமிழக அரசு!

அடுத்த கட்டுரையில்
Show comments