பெங்களூரில் 58 ராணுவ வீரர்கள் ஒரு மோட்டார் பைக்கில் பயணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
டர்னடோஸ் குழுவினர் கடந்த 6 மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். தொடக்கத்தில் 30 வீரர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிக்க, அதை தொடர்ந்து ஓடும் மோட்டார் சைக்கிளில் தலா 2 வீரர்களாக அடுத்தடுத்து ஏறினர்.
இவ்வாறு மொத்தம் 58 ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்தனர். 1.20 கிலோ மீட்டர் தொலைவை 2 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தனர்.
இதற்கு முன்னர் டர்னடோஸ் குழுவில் இருக்கும் ராணுவ வீரர்கள் 54 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று உலக சாதனை படைத்தனர்.
அதன் பிறகு, ஆர்மி சிக்னல் கார்ப்ஸ் குழுவினர் 56 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று 54 பேரின் சாதனையை முறியடித்த்னர்.
இந்த சாதனை கின்னஸ், லிம்கா, யூனிக்யூ புத்தகங்களில் இடம் பெற உள்ளது. அடுத்து 15 மோட்டார் சைக்கிள்களில் 300 வீரர்கள் கோபுரம் அமைத்து பயணம் செய்து சாதனை படைக்க திட்டமிட்டு உள்ளனராம்.