கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு சாலையில் திடீரென 500 ரூபாய் நோட்டுகள் பறந்து வந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் போட்டி போட்டு ரூபாய் நோட்டுகளை அள்ளினர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே சாத்தனூர் பாரிப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு சாலையில் நேற்று முன்தினம் 500 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து வந்தன. இதனை கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நோட்டுகளை போட்டி போட்டு அள்ள ஆரம்பித்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். அப்போது அங்கிருத்தவர்கள் நைசாக நழுவிச்சென்று விட்டனர். போலீசார் அந்த நோட்டுகளை பரிசோதித்து பார்த்த போது அவை அனைத்தும் புதிய ஒரிஜினில் 500 ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாராவது வாகனத்தில் எடுத்துச் சென்றபோது பணம் 2பறந்திருக்கும் என்று கூறப்படுகிறது.