அசாம் மாநிலத்தைச் சேர்த அரசியல் பிரமுகர் 500 ரூபாய் நோட்டுகளை பரப்பில் கட்டிலில் தூங்குவது போன்ற புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் உடல்கிரி மாவட்டம், பாய்ராகுரி கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக இருந்தவர் பெஞமின் பாசுமதாரி. இவர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய புகைப்படம் சமீபத்தில் வெளியானது.
அப்புகைப்படத்தில் தன் உடல் மீது 500 ரூபாய் நோட்டுகளை பரப்பி, கட்டிலில் தூங்குவது இடம்பெற்றுள்ளது. அவரை சுற்றி ரூபாய் நோட்டுகள் உள்ளன. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேதல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ள நிலையில், இப்புகைப்படத்தைப் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
மேலும், இவர் போடோலேண்டை தலைமையிடமாக் கொண்டு இயங்கும் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்( யு.பி.பி.எல்) சேர்ந்தவர் என்பதால் அக்கட்சியின் மீது விமர்சனம் குவிந்து வருகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமை நிர்வாக உறுப்பினர் பிரமோத் போரோ இன்று விளக்கம் அளித்தார். அதில், பாசுமதாரியை கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதியே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அவருக்கும் கட்சிக்கும் எத்தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.