Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 வயது சிறுமி பலாத்காரம்.. வெறி அடங்காததால் ஆட்டையும் பலாத்காரம் செய்த 50 வயது நபர்..!

Advertiesment
6 வயது சிறுமி பலாத்காரம்.. வெறி அடங்காததால் ஆட்டையும் பலாத்காரம் செய்த 50 வயது நபர்..!

Mahendran

, புதன், 14 ஆகஸ்ட் 2024 (11:43 IST)
ஆறு வயது சிறுமியை 50 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் வெறி அடங்காமல் ஆட்டையும் பலாத்காரம் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை 50 வயது அரசு ஊழியர் கஜேந்திர சிங் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவத்தன்று  கஜேந்திர சிங்  மது போதையில் இருந்ததாகவும், போதையின் காரணமாக 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதன் பின்னர் வெறி அடங்காததால் அருகில் கட்டப்பட்டிருந்த ஆட்டையும் வன்புணர்வு செய்ததாகவும் தெரிகிறது.

இந்த காட்சிகளை பக்கத்து வீட்டில் இருந்து ஒரு நபர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட அது போலீசார் கவனத்திற்கு சென்றதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு, இயற்கைக்கு மாறான விலங்குகளுடன் பாலியல் உறவு செய்த வழக்கு ஆகியவை அரசு ஊழியரான கஜேந்திர சிங் மீது பதிவு செய்திருப்பதாகவும், இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை தடுக்காமல் வீடியோ எடுத்த நபருக்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுநர் தேநீர் விருந்து.. திமுக அதிமுகவின் நிலை என்ன?