Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

Siva
திங்கள், 14 ஏப்ரல் 2025 (11:46 IST)
கர்நாடக மாநிலத்தில் ஐந்து வயது சிறுமியை கொலை செய்த கொலைகாரனை போலீசார் என்கவுண்டர் மூலம் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த 5 வயது சிறுமி தனது வீட்டில் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரதிஷ்குமார் என்பவர் சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். அதன் பிறகு, சிறுமியின் உடலை விட்டுவிட்டு தப்பி ஓடினார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா ஆதாரங்கள் மூலம் குற்றவாளியை பிடித்தனர். பின்னர், விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்ற போது, அவர் தப்பிக்க முயன்றதாகவும், போலீஸ் வாகனத்தின் மீது கற்கள் வீசியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, போலீஸ்காரர்கள் தற்காப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்தினர். அந்த குண்டு குற்றவாளியின் கால் மற்றும் மார்பு பகுதிகளில் பாய்ந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஐந்து வயது சிறுமியை கொன்ற குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகத் தெரிய வந்ததும், பொதுமக்கள் அந்த என்கவுண்டரை வரவேற்று, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியடைந்தனர். என்கவுண்டர் செய்த போலீஸ் கமிஷனருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், சிறுமியின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வராக சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்