Publish Date: Sat, 08 Jan 2022 (11:47 IST)
Updated Date: Sat, 08 Jan 2022 (11:48 IST)
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகலாம் என தேர்தல் ஆணையம் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன
உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தேர்தலை ஒத்தி வைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் இன்று மாலை மூன்று முப்பது மணிக்கு 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.