Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5 மாநில தேர்தல்... யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

Advertiesment
5 மாநில தேர்தல்... யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
, செவ்வாய், 9 மார்ச் 2021 (09:39 IST)
டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. 

 
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு... 
 
கேரளாவை பொறுத்தவரை மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி 82 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
அசாம் மாநிலத்தில் 126 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 67 இடங்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 57 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் 154 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
திமுக கூட்டணி 158 இடங்களையும், அதிமுக கூட்டணி 65 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் தலைசிறந்த பெண் - தமிழிசைக்கு கவுரவம்!