Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அழுகிய நிலையில் 5 சடலங்கள்… பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் – தலைமறைவான கணவர்!

Advertiesment
கணவன்
, திங்கள், 3 பிப்ரவரி 2020 (10:35 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் அவரது நான்கு மகள்களும் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஃபதேபூர் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் அக்கம்பக்கத்தினர் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து கதவை உடைத்து வீட்டினுள் பார்த்துள்ளனர்.

அந்த வீட்டில் 5 பெண்களின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. சடலங்களைக் கைப்பற்றி போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் அவரது கணவர் வீட்டில் சண்டை போட்டதாகவும் அதன் பின்னர் அவரை யாரும் பார்க்கவில்லை என்ற தகவலால் அவர் மீது போலீஸாரின் சந்தேகம் திரும்பியுள்ளது. தலைமறைவாக இருக்கும் அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் முகாமிலும் குத்தாட்டம் போடும் இந்தியர்கள் !