Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 ஆம் கட்ட வாக்குப்பதிவு.! இயந்திரங்கள் சூறையாடல்.! ஒருவர் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!!

Voting
, திங்கள், 13 மே 2024 (14:23 IST)
நாடாளுமன்ற மக்களவைக்கு நான்காம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 51.87% வாக்கு பதிவாகி உள்ளது.
 
பீஹார் (5தொகுதிகள்) , உத்தர பிரதேசம் (13 தொகுதிகள்), மேற்கு வங்கம் (8தொகுதிகள்), ஆந்திரா (25 தொகுதிகள்), ஜார்க்கண்ட் (4தொகுதிகள்), மத்திய பிரதேசம் (8 தொகுதிகள்), மஹாராஷ்டிரா (11 தொகுதிகள்), ஒடிசா (4 தொகுதிகள்), தெலுங்கானா ( 17 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (1 தொகுதி) உட்பட ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்கு பதிவு நடந்து வருகிறது. ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சட்டசபை தேர்தலும் நடந்து வருகிறது.

தொண்டர்கள் மோதல்:
 
ஆந்திராவில் சித்தூர், கடப்பா, அனந்தபூர் உட்பட பல இடங்களில் வாக்கு சாவடிகளில், ஓய்.எஸ்.ஆர் மற்றும் தெலுங்கு தேச கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வாக்கு பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ள ஓட்டு பதிவு செய்ய முயன்றதாக கூறி, இரு கட்சி தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர்.

திரிணாமுல் கட்சி நிர்வாகி கொலை:
 
மேற்குவங்க மாநிலத்தில் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கேதுகிராமில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்டார். முன்பகை காரணமாக கொல்லப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்கம் மாநிலம் துர்காபூரில் பாஜக மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே லேசான மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்கம் பீர்பும் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு வெளியே இருந்த தங்களது கடையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சேதப்படுத்தியதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
4ம் கட்ட மக்களவை தேர்தலில், பகல் 1 மணி நேர நிலவரப்படி 40.32% வாக்குகள் பதிவாகி உள்ளது. 
 
ஆந்திரா - 40.26% ,
பீஹார் - 34.44%,
ஜம்மு காஷ்மீர் - 23.57%
ஜார்க்கண்ட் - 43.80%,
மத்திய பிரதேசம் - 48.52%,
மஹாராஷ்டிரா - 30.85%,
ஒடிசா - 39.30%,
தெலுங்கானா - 40.38%,
உத்தரபிரதேசம் - 39.68%,
மேற்குவங்கம் - 51.87%
 
சட்டசபை தேர்தல்:
 
ஆந்திராவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 40.26% ஓட்டுகள் பதிவாகியுள்ளது. ஒடிசாவில் முதல்கட்ட சட்டசபை தேர்தலில் 39.30% ஓட்டுப்பதிவானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12ஆம் வகுப்பை அடுத்து சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?