20 பெண்களை திருமணம் செய்த 46 வயது நபர்.. இப்போது சிறையில்!
, திங்கள், 5 டிசம்பர் 2022 (14:38 IST)
20 இளம் பெண்களை திருமணம் செய்த 46 வயது நபரை காவல்துறையினர் பிடித்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த 46 வயது நபர் இதுவரை 20 பெண்களை திருமணம் செய்திருப்பதாகவும் அவர்கள் பெரும்பாலும் சிறுமிகள் என்றும் கூறப்படுகிறது
அவர் திருமணம் செய்த ஒரு சிறுமிக்கு வயது வெறும் ஒன்பது மட்டுமே என்பது அதிர்ச்சிகரமான தகவல் ஆகும். அது மட்டுமின்றி அவர் தனது சொந்த மகள்களான 2 சிறுமிகளையும் திருமணம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் 20 பெண்களை திருமணம் செய்தவர் ஒரு மதப் பிரச்சாரம் செய்பவர் என்றும் அவர் தன்னைத்தானே தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு அந்த பகுதியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்