Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

41 சீட் தேவை! சொன்னபடி 48 மணி நேரத்தில் பிரதமரை அறிவிப்போம்?! – பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் ஸ்கெட்ச்!

Advertiesment
rahul gandhi

Prasanth Karthick

, செவ்வாய், 4 ஜூன் 2024 (18:46 IST)
மக்களவை தேர்தலில் கிட்டத்தட்ட பெரும்பான்மையை நெருங்கியுள்ள காங்கிரஸின் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க காய் நகர்த்தும் வேலையை தொடங்கியுள்ளது.



இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி 294 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 231 இடங்களில், பிற கட்சிகள், சுயேட்சைகள் 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைய 272 சீட்கள் தேவைப்படும் நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் தற்போதுள்ள 231 தொகுதிகளில் வென்றால் மேற்கொண்டு 41 சீட்கள் கிடைத்தால் ஆட்சியமைக்க முடியும் என்பதால் தெலுங்கு தேசம் கட்சி, சுயேட்சைகள் உள்ளிட்டோருடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல்காந்தி, நாளை இந்தியா கூட்டணியின் கட்சிகளோடு சேர்ந்து ஆலோசனை செய்துவிட்டு பெரும்பான்மை பெறுவதற்கு தெலுக்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளிடம் பேசுவது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.


தேர்தலுக்கு முன்னதாக ‘காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார்?” என கேட்டபோது இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை 48 மணி நேரத்திற்குள் எங்களால் தேர்வு செய்துவிட முடியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியிருந்தார். தற்போது இந்தியா கூட்டணிக்கு தேவையான 41 சீட்களும் கிடைத்துவிடும் நிலையில் கூட்டணி தொங்கு ஆட்சி அமைந்தால் பிரதமராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெரும்பாலும் காங்கிரஸை சேர்ந்தவர்களாலும், மற்ற காங் ஆதரவு கட்சிகளாலும் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளாராக முன்னிறுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி படுதோல்வி..! பட்டாசு வெடித்து கொண்டாடிய எச். ராஜா..!