Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீட்பு பணியில் விபரீதம்: சிறுமியை மீட்க போராடிய 40 பேர் பள்ளத்தில் விழுந்து பரிதாபம்!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (13:05 IST)
மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்கும் போராட்டத்தின்போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் தண்ணீரில் விழுந்தனர்.
 
மத்தியப்பிரதேசம் மாநிலம், விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோதா பகுதியில் நேற்று இரவு 8 வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அதையடுத்து அப்பகுதி மக்கள் பதற்றத்தில் ஓடிவந்து கிணற்றை சுற்றி நின்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 
அதிக பாரம் தாங்காமல் கிணற்றின் சுற்றுச்சுவர் உடைந்து 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்து காயமடைந்தனர். இதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) விநாயக் வர்மா தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை.. அதிமுக களத்தில் இறங்கும்: ஈபிஎஸ்

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

அடுத்த 3 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்.. கனமழை எச்சரிக்கை..!

ஓடும் ஆம்புலன்ஸில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை .. ம.பியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments