கைலாசாவுக்கு எகிறும் மவுசு.. 40 லட்சம் பேருக்கு குடியுரிமை வேண்டுமாம்!!

Arun Prasath
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (09:21 IST)
கைலாசாவுக்கு குடியுரிமை கேட்டு சுமார் 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

குழந்தை கடத்தல் வழக்கு, பாலியல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நித்யானந்தா மீது தொடுக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென தலைமறைவானார். மேலும் ஆண் சீடர்களுக்கும் நித்யானந்தா பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாகாவும் தற்போது புகார் எழுந்துள்ளது.

இதனிடையே வருகிற 18 ஆம் தேதிக்குள் நித்யானந்தாவை கண்டுபிடிக்க பெங்களூர் நீதிமன்றம் கர்நாடகா காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நித்யானந்தா சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ”கைலாசா நாட்டை நான் அமைத்தே தீருவேன்” என தீர்க்கமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்