Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பிட மறுத்த 4 வயது குழந்தை… கோபத்தில் அடித்த தாய் – சுருண்டு விழுந்த குழந்தை மரணம் !

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (07:56 IST)
கேரளாவின் கொல்லம் பகுதியில் சாப்பிட மறுத்த குழந்தையை தாய் அடிக்க எதிர்பாராத விதமாக குழந்தை உயிர் இறந்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த செவிலியராக வேலைப் பார்த்த அந்த பெண், தனது குழந்தை மற்றும் கணவரோடு வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் குழந்தைக்கு சில வாரங்களுக்கு முன்னர் நிமோனியா காய்ச்சல் வந்து, அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை சாப்பிடாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட முயற்சித்த தாய் சாப்பிட மறுத்ததால் கோபத்தில் குழந்தையை அடித்துள்ளார்.

இதனால் குழந்தை மயங்கி விழுந்துள்ளது. இதைப்பார்த்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கி செல்ல குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர் மருத்துவர்கள். இதையடுத்து உறவினர்கள் தாய் மேல் புகாரளிக்க போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments