Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்: கைது செய்த போலீஸ்

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (08:30 IST)
புல்வாமா தாக்குதலை கொண்டாடும் விதமாக போட்டோ வெளியிட்ட 4 மாணவிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த துயர சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது.  இதற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நாடெங்கிலும் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்து வருகிறது.
 
இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தல்வீன் மன்சூர், ஜோகிரா நசீர், உஸ்மா நசீர், இக்ரா ஆகிய 4 மாணவிகள் புல்வாமா தாக்குதலை கொண்டாடும் விதமாக இணையத்தில் போட்டோ பதிவிட்டனர். 
 
இதனையறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக அந்த 4 மாணவிகளை இடைநீக்கம் செய்தது. மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். போலீஸார் அந்த 4 மாணவிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை.. பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவா?

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து! மாநகராட்சி அறிவிப்பு..!

ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அவதூறு பரப்பிய ஆசிரியை.. ஒரு படித்தவர் இப்படி செய்யலாமா? நீதிமன்றம் கண்டனம்..!

பணி நேரத்தில் தூங்கிய டாக்டர்.. பரிதாபமாக பலியான நோயாளி உயிர்..!

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி தாக்கியதால் பரபரப்பு.. மக்கள் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments