Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவில் கடும் வெயில்.. மயங்கி விழுந்து 4 பேர் பலியானதால் அதிர்ச்சி..!

Advertiesment
Summer

Mahendran

, வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (18:16 IST)
கேரளாவில் இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் கடும் வெயில் காரணமாக வாக்களிக்க வந்த நான்கு பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஏற்கனவே கடந்த 19ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடந்த போது வாக்களிக்க வந்த இரண்டு முதியவர்கள் பலியானதாக செய்தி வெளியானது என்ற நிலையில் இன்று கேரளாவில் தேர்தல் நடந்த போது நான்கு பேர் பலியாகி இருப்பது தேர்தல் ஆணையத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவில் வாக்களிக்க வந்த 68 வயது சந்திரன்ம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 66 வயது அகமது, ஆலப்புழா தொகுதியின் 70 வயது சோம ராஜன் மற்றும் திரூரைச் சேர்ந்த 63 வயது சித்திக் ஆகியோர் வாக்களித்துவிட்டு வீடு திரும்பியபோதும்,  வாக்களிக்க வரிசையில் நின்ற போதும் உயிரிழந்ததாக தெரிகிறது. 
 
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த நான்கு பேர் வெயில் காரணமாக உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இனிவரும் தேர்தலிலாவது முதியவர்கள் காலையில் அல்லது நான்கு மணிக்கு மேல் வாக்களிக்க வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்விட்டருக்கு போட்டியாக ஆரம்பித்த ‘கூ’ நிறுவனம்.. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறல்..!