விவசாயிகள் போராட்டம் குறித்து இந்தியாவை கேள்வி எழுப்ப இங்கிலாந்த் எம்.பிக்கள் 36 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தற்போது இந்த போராட்டம் குறித்து இந்தியாவிடம் பேசுமாறு தங்கள் நாட்டின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப்பிற்கு இங்கிலாந்த் எம்.பிக்கள் 36 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் காரணமாகவும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாமான விலையை உறுதி செய்யவும் இந்திய அரசு தவறியதால் நாடு முழுவதும் பரவலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது பிரிட்டனில் உள்ள சீக்கியர்களுக்கும் பஞ்சாபுடன் தொடர்புடையவர்களுக்கும் கவலை அளிக்கிறது. பல பிரிட்டிஷ் சீக்கியர்களுக்கு இந்த விஷயம் குறித்து கவலை கொண்டுள்ளனர் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.