Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்ரிமோனியல் மூலம் 15 பெண்களை ஏமாற்றி திருமணம்: 4 குழந்தைகளின் தந்தை கைது..!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (15:29 IST)
மேட்ரிமோனியல் மூலம் மோசடி செய்து 15 இளம் பெண்களை திருமணம் செய்து நான்கு குழந்தைகளுக்கு தந்தையான 35 வயது நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
மைசூரை சேர்ந்த 35 வயது மகேஷ் நாயக் என்பவர் திருமண மேட்ரிமோனி இணையதளங்களில் தான் திருமணமாகாதவர் என்று கூறி பதிவு செய்திருந்தார். தன்னை மருத்துவர், பொறியாளர் என்று பதிவு செய்து வரிசையாக 15 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து உள்ளதாக தெரிகிறது.
 
 இவரிடம் ஏமாந்த அனைத்து பெண்களுமே நன்கு வேலையில் இருக்கும் சம்பாதிக்கும் பெண்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மருத்துவர் என்று நம்ப வைப்பதற்காக ஒரு போலி கிளினிக்கை அமைத்து அதில் நர்ஸ் ஒருவரையும் வேலைக்கு அமர்த்தி உள்ளதாக தெரிகிறது. 
 
15 பெண்களை திருமணம் செய்த இவருக்கு 4 பெண்கள் மூலம் நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இவருடைய ஏமாற்று நடவடிக்கையை கண்டுபிடித்த மனைவிகளில் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்