சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9240 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 331 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது :
கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் பலியாகியுள்ளsuனர். 796 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.