Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கதற கதற கற்பழிப்பு: 32 மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்: 20 வயது கும்பலின் அட்டூழியங்கள்!!!

Advertiesment
கதற கதற கற்பழிப்பு: 32 மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்: 20 வயது கும்பலின் அட்டூழியங்கள்!!!
, புதன், 6 மார்ச் 2019 (08:43 IST)
ஆந்திராவில் 20 வயது கும்பல் 32 மாணவிகளை கற்பழித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஸ்தலமான பவுத்ராம குகைக்கோவிலுக்கு காதல் ஜோடிகள் வருகை எப்பொழுதும் அதிகமாக இருக்கும். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் தனிமையை விரும்பும் காதல் ஜோடிகள் அங்கு வருவர். விடுமுறை நாட்களில் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். மற்றபடி வார நாட்களில் அங்கு பெரிய அளவில் ஆள் நடமாட்டம் இருக்காது.
webdunia
இந்நிலையில் சமீபத்தில் அந்த குகைக்கு நவீன் - ஸ்ரீ என்ற இளம்காதல் ஜோடி ஒன்று சென்று அங்கு தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு சென்ற மர்மகும்பல், நவீனை அடித்துப்போட்டுவிட்டு அந்த பெண்ணை பலவந்தமாக கற்பழித்ததோடு அவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடியுள்ளனர்.
webdunia
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பொட்லூரி என்பவனை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. பொட்லூரி தனது நண்பர்கள் சோமய்யா, கங்கய்யா, நாகராஜு ஆகியோருடன் சேர்ந்து இதுவரை 32 பெண்களை கற்பழித்துள்ளனர். அதில் 3 ஆண்களையும் ஒரு பெண்ணையும் கொடூரமாக கொலையும் செய்துள்ளனர். கொடுமை என்னவென்றால் இவர்கள் அனைவருமே 20 வயதுடையவர்கள். தொடர்ந்து இந்த மனித மிருகங்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அது ஓவரானதால் ஆபாச பட நடிகர் மரணம்