Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதம் 300 யூனிட் இலவசம் மின்சாரம்.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (18:07 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என டெல்லி மாநில முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டியின் இருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் அங்கு போட்டியிட உள்ளது.
 
 இந்த நிலையில் ஆம் ஆத்மிக் கட்சி தலைவரும் டெல்லி மாநில முதல்வரும் ஆன அரவிந்த் கெஜ்வால் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் 300 யூனிட் இலவசம் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் உதவி தொகையாக வருவாய் 3,000 வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments