Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேக் வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை....மத்திய அரசு எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (15:19 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது புகைப்படத்தை மார்பிங் செய்து போலி வீடியோ ‘DeepFake Edit ‘ நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

இதுகுறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா ‘’இணையதளத்தில் வைரலாகி வரும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட DeeoFake Edit வீடியோ பற்றி பேசுவதற்கு வருத்தமாக உள்ளது.

தொழில்  நுட்பம் மூலம் இப்படி தவறானப் பயன்படுத்தப்படுவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. இது எனது பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால் அதனை எப்படி சமாளித்திருப்பேன் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படும் முன்பு இதுபற்றி தெரியப்படுத்த வேண்டும்’’ என்று கூறி கண்டனம் தெரிவித்தார்.

ஏஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நடிகை ராஷ்மிகாவின் DeepFake Edit வீடியோ இணையதளத்தில் வைரலாகிவரும் நிலையில் இதற்கு அமிதாப் பச்சன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர்  ''நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான போலி வீடியோ விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த போலி வீடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் கூடிய ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, தனது உடலையும்,  நடிகையின் முகத்தையும் பயன்படுத்தி டீப் பேக் வீடியோவை உருவாக்கியதற்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று  இங்கிலாந்து வாழ் இந்திய பெண்மணி ஜாரா படேல் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments