Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடுவானில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு இரவோடு இரவாக இந்தியா வரும் ரஃபேல்!

நடுவானில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு இரவோடு இரவாக இந்தியா வரும் ரஃபேல்!
, செவ்வாய், 30 மார்ச் 2021 (08:30 IST)
இந்திய விமானப்படைக்கு 4 ஆம் கட்டமாக மூன்று ரஃபேல் விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியா வருகிறது. 

 
இந்திய விமானப்படைக்காக 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்க 2016-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானங்களை பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக் கொண்டார். 
 
இந்த விமானங்கள் முன்னரே இந்தியா வர இருந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் விமானங்கள் ஒப்படைப்பு பணி தாமதமானது. இருப்பினும் தற்போது வரை மூன்று கட்டமாக 11 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. 
 
 இந்நிலையில் 4 ஆம் கட்டமாக மூன்று விமானங்கள் பிரான்சில் இருந்து வருகிறது. இந்த போர் விமானங்களுக்கு ஓமன் அருகே நடுவானில் எரிபொருள் நிரப்படவுள்ளது. அதோடு, இந்த விமானங்கள் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இரவில் வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்லாத காசோலைகள்... பயனர்களுக்கு நல்ல சேதி சொன்ன வங்கி!