Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக மேலும் 3 தலைவர்கள் விலகல்!

Advertiesment
குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக மேலும் 3 தலைவர்கள் விலகல்!
, திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (18:05 IST)
குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் 3 தலைவர்கள் விலகல்.


கடந்த நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் தேசிய கட்சியான காங்கிரஸ் பலமான பின்னடைவை சந்தித்த நிலையில் மீண்டும் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸை நிலைப்படுத்த சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஜம்மு மாநில காங்கிரஸிற்கு பல்வேறு பதவிகளில் பலரும் நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் பிரச்சாரக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அவர் அந்த பதவி வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாக அந்த பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து கட்சி செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்து வந்த குலாம் நபி ஆசாத் தற்போது காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். 

இதனைத்தொடர்ந்து குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் 3 தலைவர்கள் விலகி உள்ளனர். கதுவா மாவட்டம் பானி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் துணை சபாநாயகருமான குலாம் ஹைதர் மாலிக் மற்றும் முன்னாள் எம்எல்சிக்கள் சுபாஷ் குப்தா, ஷாம் லால் பகத் ஆகியோர் விலகி உள்ளனர்.

கட்சி தலைமைக்கு ராஜினாமா கடிதங்கள் அனுப்பி உள்ளனர். முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜித் வானி, மனோஹல் லால் சர்மா, குரு ராம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பல்வான் சிங் ஆகியோரும் டெல்லியில் ஆசாத்தை சந்தித்தனர். அவர்கள் காங்கிரஸில் இருந்து விலகிய பின்னர் குலாம் நபி ஆசாத்துக்கான ஆதரவை முறைப்படி அறிவிப்பார்கள் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்: தொடங்குவது எப்போது?