Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3.43 லட்சம் பாதிப்பு, 10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை: இந்தியா கொரோனா நிலவரம்

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (06:34 IST)
3.43 லட்சம் பாதிப்பு, 10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தபோதிலும், தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 343,026 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 10,243 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் இந்தியாவில் கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கிறது என்பது அதிர்ச்சிகரமான ஒரு தகவல் ஆகும். அதாவது இந்தியாவில் மொத்தம் 9,915 பேர் கொரோனா காரணமாக இதுவரை பலியாகி உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாகவுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 1,07,958 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து தமிழகத்தில் 44,661 பேர்களும், டெல்லியில் 41,182 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

அடுத்த கட்டுரையில்
Show comments