Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ம் கட்ட மக்களவை தேர்தல்..! 63.50 சதவீதம் வாக்குப்பதிவு..!

Senthil Velan
சனி, 27 ஏப்ரல் 2024 (10:01 IST)
நாடு முழுவதும் 88 தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலில் 63.50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
 
நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கு நேற்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மராட்டியம் (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஷ்கார் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) என 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன.
 
ஆனால் மத்தியபிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரண மடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. எஞ்சிய 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 63.50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
குறிப்பாக திரிபுராவில் அதிகபட்சமாக 79.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரபிரதேசத்தில் 54.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ALSO READ: ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்.! பெண் தோழியுடன் வாலிபர் கைது..!!
 
2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments