Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2ஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு : கனிமொழி, ராசா விடுதலை

Advertiesment
2ஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு : கனிமொழி, ராசா விடுதலை
, வியாழன், 21 டிசம்பர் 2017 (10:48 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் கனிமொழி, ஆர்.ராசா ஆகியோரை விடுவித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 
மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம்சாட்டியது. இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
கடந்த 2011 ஆம் ஆண்டு 2ஜி வழக்கு குறித்து சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சுமார் 6 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு வெளியாவது தொடர்ந்து தள்ளிப்போனது. 
 
இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஆர்.ராசா மற்றும் கனிமொழி, துரைமுருகன், ராசாத்தி அம்மாள் உள்ளிட்டோர் இன்று காலை நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அதேபோல், நீதிபதி ஓ.பி.சைனி உள்ளிட்ட நீதிபதிகள் இன்று காலை நீதிமன்றத்திற்கு வந்தார்.
 
சரியாக 10.40 மணிக்கு தீர்ப்பை அறிவித்த நீதிபதி ஓ.பி.சைனி, 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது எனக்கூறிய நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார்.

இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெடிகுண்டு வீசி போலீஸ் இன்ஸ்பெக்டரை கொள்ள முயற்சி