காஷ்மீரில் சில பகுதிகளில் 13 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி காஷ்மீரை இரண்டு யுனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதனால் அங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாதக் கூடாதென முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் ஊரங்கு உத்தரவு விதிக்கப்பட்டு அதன் அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தொலைபேசி, லேண்ட்லைன், இணைய சேவைகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டன. இதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பின.
இதையெதிர்த்து தொடங்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு காஷ்மீரில் படிப்படியாக தளர்த்தும் எனக் கூறியது. இதையடுத்து 13 நாட்களுக்கு பின்னர் ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர், ரேஸி உள்ளிட்ட பகுதிகளில் மொபைல்களுக்கான 2ஜி இணைய சேவை 13 நாட்களுக்குப் பின் இன்று மீண்டும் தொடங்கியது. மேலும் 17 பள்ளத்தாக்குகளில் லேண்ட்லைன் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல தொடங்கப்பட்டன.