Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மன்னர் 28ஆம் புலிகேசியும் அவரது மாங்காய்களும்...

Advertiesment
மன்னர் 28ஆம் புலிகேசியும் அவரது மாங்காய்களும்...
, செவ்வாய், 22 நவம்பர் 2016 (10:30 IST)
(இது பாட்டிகளின் சுருக்குபை , மன்னரின் உரிமை கதை)


 

 
ராஜாதி  ராஜர்,  ராஜ  கம்பீரர்,  53  இன்ச்  மார்புக்கு  சொந்தக்காரர், மன்னர் 28 ஆம்  புலிகேசிஜியின்  அமைச்சரவை  தர்பார்
 
மன்னர்  புலிகேசி ஜி :  என்   அருமை  மாங்காய்களே !  நாட்டு  நிலவரங்கள் எல்லாம்  எப்படி  இருக்கிறது ? மக்கள்  என்னை  பற்றி  என்ன  பேசிக் கொள்கிறார்கள் ?
 
(மாங்காய்)square :  அரசே ! இணையவாசிகள்  அரசின்  கருப்பு  பணம்  மீட்பு தொடர்பாகவும், கார்பரேட்களின்  வாரா  கடன்  பற்றியும்  தங்களது  விவாதங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இது  நம்  அரசுக்கு  கவலை  தரும்  விஷயம்.
 
மன்னர் :  போதும் நிறுத்தும் !  எனக்கு தெரியும் !  சற்றே  அயர்ந்து  ஆழ்ந்து  யோசிப்பது  போல தூங்கிய  மன்னர் ,  திடீரென்று விழித்து  கோபமாக  கருப்பு  பணத்தை  மீட்டே  தீருவேன் என்று  ராஜ சிம்மாசனத்தை  விட்டு  கீழே  இறங்குகிறார்.
 
மாங்காய்  No .1 : என்ன  காரியம்  செய்ய  போகிறீர்கள் !  மன்னா கார்பரேட்களால்  தான் இந்த ராஜ தர்பார் . இந்த   ராஜ்ஜியம் .  நீங்கள்  மன்னர்.  நாங்கள்  உங்களின் மாங்காய்கள் .
 
மன்னர் :  உங்களை  எல்லாம்  வைத்துக்   கொண்டு  என்  ஆவி  போகிறது வாரும் !  வந்து தொலையும் ! வந்து  பாரும்  என்னை   திரையில் பாரும்!
 
திரையில் புலிகேசி
 
என்  அருமை  மக்களே!  நான்  உங்களின்  புலிகேசி !  இந்த  பாகிஸ்தான் தீவிரவாதிகளால்  ஒரே  தொல்லை .  அதனால்  கருப்புப்பணத்தை  மீட்க போகிறேன்.  அதன்   முதல்  கட்டமாக  நாடு  முழுவதும்  உள்ள  பாட்டிகளின் சுருக்கு பைகளிலிருந்து  கருப்பு  பணம்  மீட்கப்படும்.  இதனால்  பல்  இல்லாத பாட்டிகள்  பாதிக்கப்படுவார்கள் தான் . நான்  நாட்டின்  நலன்  கருதி   பாகிஸ்தான்  தீவிரவாதிகளுக்கு  எதிராக  புறப்படுகிறேன் .
 
(ஓ ! ஒரு  தென்றல்  புயலாகி )
 
திரையில் மாங்காய் No.1
 
மன்னரின்  மகத்தான  அறிவிப்பை  கண்டு  பாட்டிகள்  பயப்பட வேண்டாம். உடனே  அருகில் உள்ள   ATM /வங்கிகளுக்கு  சென்று  உங்கள்  சுருக்கு பையை திறந்து,   பழைய நாணயங்களை  கொடுத்து,  புதிய  நாணயங்களை பெறலாம். Dont worry  பாட்டிஸ் !
 
பாட்டிகள்   நிலை
 
நம்  தர்ம  பிரபு  புலிகேசி  மன்னர்   அவர்கள்  பாட்டிகளின்   சுருக்கு பையிலிருந்து  பெரும் கருணையுடன்  4.5  காசுகள்  வழங்கியதை  பெறுவதற்கு ATM /வங்கி  வாயிலில்  குவிந்த பாட்டிகள்.  வங்கி  ஊழியர்கள்  திணறல். பல பாட்டிகள்  மரணம்.  வெற்றி!  வெற்றி!
 
திரையில் (மாங்காய்)square
 
பாட்டிகளின்  கஷ்டத்தை  நம்  மன்னர் அறிவார்.  இந்த  பாட்டிகள்  மூக்கு பொடிக்கு அதிகமாக செலவு  செய்வதை  நம்  மன்னர்  அறிவார். பாட்டிகள்  உடல் நலத்தை  கருத்தில்  கொண்டு இன்று,  முதல்  நேற்று  வரை வழங்கப்பட்டு  கொண்டு  இருந்த  4.5  காசுகளுக்கு  பதில்  2 காசுகள்  மட்டும் வழங்கப்படும்.
 
திரையில் மன்னர்  புலிகேசி
 
பாட்டிகளுக்கு  ஏற்பட்டுள்ள  சிரமத்தை  அறிவேன் .வருந்துகிறேன்,  தலை வணங்குகிறேன . ஹமாரா  தேஷ்  பாட்டிகி  ஜே !
 
திரையில்  மாங்காய் No .1
 
பாட்டிகளுக்குள்   சண்டை  வேண்டாம். பாட்டிகளின்  பணம்  பாட்டிகளுக்கே. இன்று  ஒரு நாள்  மட்டும்  100  வயது  கடந்த  பாட்டிகளுக்கே  நாணயங்கள். மற்ற  பாட்டிகள்  சற்றே பொறுமை  காக்கவும்.
 
திரையில் புலிகேசி ஜி அடிமைகள்
 
அடிமை  no .1 :  புதிய  புலிகேசி  தேசம்  பிறந்தது.
 
அடிமை  no .2 :  நாட்டின்  வீர்கள்  பல  மணி  நேரம்  எல்லையில்  நிற்கும்  போது  பாட்டிகள்  ஏன்  ATM  வாசலில்  நிற்க  கூடாது ?
 
அடிமை no . 3:  50  நாட்களுக்கு  பிறகு  நம்  மன்னர்  அனைத்து  பாட்டிகளுக்கு ரூபாய் 1500 டெபாசிட்  செய்வார்.
 
அடிமை no . 4:  பல  கோடி  பாட்டிகள் இருக்கும் போது,  சில  பாட்டிகள்  இறந்தால்  தவறு இல்லை.
 
தொடரும் அடிமைகள் உற்சாகம்.பாட்டிகள் கதறல்.
 
திரையில்  மாங்காய்  No .1
 
பாட்டிகளுக்காகவே   வாழும்   நம்  மன்னர், 10  நாட்களுக்கு  பாட்டிகளின்  பயண கட்டணத்தை  ரத்து  செய்திருக்கிறார்.  கருணை  உள்ளம்  படைத்த  நம்  மன்னர், பாட்டிகள் மயானங்களில்  பழைய  நாணயங்களையே  பயன்படுத்தி கொள்ளலாம்  என  அனுமதி தந்திருக்கிறார். வாழ்க நம் மன்னர் ! 
 
திரையில் (மாங்காய்)square
 
பாட்டிகள்  அமைதி  காக்கவும் ! பாட்டிகளுக்கோ  அல்லது  அவர் உறவினர்களுக்கோ திருமணம்  என்றல்  முறைப்படி  நம்  மன்னருக்கு அழைப்பிதழ்  தந்து  உங்கள் பணத்திலிருந்து  ரூபாய் 25  பெற்று கொள்ளலாம்.
 
திரையில் (மாங்காய்)cube
 
பாட்டிகளே !  புதிய  நாணயத்தின்  நம்பகத்தன்மை  பற்றி  அரசுக்கு  கோரிக்கைகள் வருகின்றன. பாட்டிகளே ! துருப்பிடித்தால்  தான்  அவை  அசல்  நாணயங்கள்.
 
நீதிமன்றத்தில்  (மாங்காய்)four
 
கனம் நீதிபதி அவர்களே பாட்டிகளின் சுருக்குபை கருப்புப்பணம் மீட்பு திட்டத்தால் நாங்கள் பாட்டிகளை சீரியல் பார்ப்பதில் இருந்து மீட்டு இருக்கிறோம். இதனால் பல குடும்பங்களை காப்பாற்றி இருக்கிறோம். பாட்டிகள் வரிசையாக பொறுமையாக நாணயங்களை பெற்று வருகிறார்கள் மை லாட்!
 
மன்னர் இல்லாத ராஜ தர்பார்
 
அகங்காரம்  இல்லாத  மன்னர்  எதிர்க்கட்சிகள்  தன்  முகம்  காட்ட   மாட்டார் .எனவே  அவரது  மாங்காய்கள்  தர்பாரில்  பதில்  சொல்வார்கள் .
 
திரையில் மன்னர் புலிகேசி ஜி
 
என்  அருமை  பாட்டிகளே !  பாகிஸ்தான்  தீவிரவாதிகளுக்காக  இதை பொறுத்துக் கொள்ளுங்கள்  இது  ஒரு  கசப்பு  மாத்திரை. பிரஷர்  மாத்திரை.
 
மீண்டும் திரையில் மன்னர்
 
நாட்டில்  பாட்டிகளை    கொண்டு  எதிர் கட்சிகள்  புரட்சிக்கு  திட்டமிட்டு உள்ளது. நேற்று இரவு  சென்னையில்  காத்திருந்த  ஒரு  பாட் டி  ஒரு  ATM ஐ  போட்டு தள்ளி  உள்ளது,  என் கவனத்திற்கு  மாங்காய்கள்  கொண்டு வந்தன. சுருக்குபை  கருப்பு  பணம்  மீட்பு  தொடர்பாக திருத்தங்கள்  கொண்டு வரப்படும். இதன்படி  பாட்டிகள்   வீட்டுக்கே  அதிகாரிகள்  வந்து சுருக்குபையை பெறுவார்கள். அதற்கு  நிகராக  புதிய  சுருக்குபை  வழங்கப்படும். இதுவரை உயிரிழந்த  பாட்டிகள்  தியாகம்  போற்றப்படும். 
 
கண்  கலங்கியடியே  பாட்டிகளை காத்தான், new காத்தவராயன் மன்னர் புலிகேசி ஜி வாழ்க வாழ்க
 
குறிப்பு :  இது கற்பனை கதை.

webdunia


இரா. காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
சென்னை
[email protected]

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் குலுங்கியது புகுஷிமா: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி