கடந்த சில நாட்களுக்கு முன் டிக்-டாக் வீடியோவில் புகழ் பெற 22 வயது இளைஞர் ஒருவர் நண்பரின் உதவியோடு பின்பக்கமாக பல்டி அடித்து சாகசம் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டைமிங் மிஸ் ஆனதால் அவரது தலை நேரடியாக தரையில் மோதியதால் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு முறிந்தது
இதனையடுத்து அந்த இளைஞர் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கழுத்து மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில் ஒருவார சிகிச்சைக்கு பின் அந்த இளைஞர் இன்று பரிதாபமாக மரணம் அடைந்தார். மரணம் அடைந்த இளைஞர் குமாரசாமி என்பவர் அவரது பெற்றோருக்கு ஒரே மகன். டிக்டாக் மோகத்தால் ஒரே மகனை இழந்த அவரது பெற்றோர்கள், மகனின் பிணத்தின் முன் கண்ணீர் விட்டு கதறியழுத காட்சி கல்நெஞ்சையும் கரைக்கும் வகையில் இருந்தது
இனிமேலாவது டிக்-டாக் வீடியோவிற்காக ரிஸ்க் எடுக்கும் வழக்கத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது