உல்லாசமாக இருந்த வீடியோவை இணையத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி, தனது நண்பருடன் உடல் உறவில் ஈடுபடும்படி காதலியை வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் பள்ளியாவில் வசிக்கும் 17 வயது பெண், நவுஷாத் (21) என்பவரை காதலித்து வந்தார். இதை தொடர்ந்து இருவரும் லாட்ஜில் உல்லாசமாக இருந்துள்ளனர். அதை நவுஷாத் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், நண்பர் விரேந்திர பாரதியுடன் உடல் உறவில் ஈடுபடும்படி காதலியை நவுஷாத் வற்புறுத்தியுள்ளார். இதற்கு காதலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ’நண்பருடன் உறவில் ஈடுபடவில்லை என்றால், உன் ஆபாச படத்தை இணையதளத்தில் விடுவேன்’ என்று காதலியை நவுஷாத் மிரட்டியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ந்து போன அப்பெண், நடந்த விஷயத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, நவுஷாத்தையும் அவர் நண்பர் விரேந்திரனையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.