சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 204 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (19:42 IST)
கேரளம் மாநிலத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 204 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பதனாபுரம் பகுதியில் 8 வயது சிறுமி மற்றும் சிறுமியின் 3 வயது தங்கை இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்த வினோத் என்ற நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு அங்குள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில்  நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

அதில், இருவழக்குகளிலும் முறையே 100 மற்றும் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 204 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.4.2 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. அபராதம் செலுத்த மறுத்தால் கூடுதலாக 26  மாதங்கள் சிறை என்று என்று உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

காங்கிரஸ் கேட்ட 70 சீட்!.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த மு.க.ஸ்டாலின்!...

அடுத்த கட்டுரையில்