Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு நாடுகளில் சிக்கிய 20, 000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் - ஹர்தீப் சிங் புரி

பல்வேறு நாடுகளில் சிக்கிய 20, 000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் - ஹர்தீப் சிங் புரி
, வியாழன், 21 மே 2020 (16:00 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 4 வது கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என பல்வே தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து  மத்திய அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், பல்வேறு நாடுகளில் சிக்கிய சுமார் 20 ஆயிரம் இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மீட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

மேலும், யணிகள் தெரிவிக்கும் சுய தகவல் அல்லது ஆரோக்கிய சேது செயலி தரவு அடிப்படையில் பயண அனுமதிக்கப்படுவர்.
 
ஆரோக்கிய சேது செயலியின் நிலை சிவப்பு நிறமாக இருந்தால் பயணம் செய்ய அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விமான சேவை கட்டணங்கள் கட்டுக்குள் வைக்கப்படும், இந்தக் கட்டணத்தி அதிகபட்சம், குறைந்தபட்சம் ஆகிய இரண்டையும் வரையத்து அட்டவணைப்படுத்தப்படும்  என தெரிவித்துள்ளார்.

வரும் மே 25 ஆம் தேதிமுதல் உள்நட்டு விமான போக்குவரத்து தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வட தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் !