உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள கிராமத்தில் தனியார் நிகழ்ச்சியில் நடனமாட வந்த இரு பெண்களை 12 ஆண்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதில் தொடர்புடைய ராஜ் மற்றும் ஜிதேந்தரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் எனவும், பாலியல் பலாத்காரம் செய்த 12 ஆண்களில் இவ்விருவரும் அடங்குவர் எனவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ஆக்ராவை அடுத்து 50 கிலோமீட்டரில் உள்ள ஒரு கிராமத்தில் ஜூன் 25-ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் இதைபற்றி கூறுகையில், “நாங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நடனம் ஆடி கொண்டு இருக்கும் பொழுது சண்டை ஏற்பட்டது. அதனால், பாதுகாப்பாக எங்களை வீட்டுக்கு கூட்டி போய் விடுவதாக எங்களை காரில் ஏற்றினர்.
பாதி வழியில் துப்பாக்கி ஏந்தியபடி ஒரு நபர் எங்கள் வாகனத்தை பின் தொடர்ந்து வருவதை பார்த்த பிறகு தான் நாங்கள் கடத்தபட்டுள்ளதை உணர்ந்தோம். கிராமத்திற்கு வெளியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து எங்கள் இருவரையும் 12 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். எங்களில் ஒரு பெண் கர்பமாக இருப்பாதாக கூறவே அவர்கள் அந்த பெண்ணை விட்டு விட்டனர்” என்று கூறினர்.
இதுதொடர்பாக புகாரை பதிவு செய்து மற்ற குற்றவாலிகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.