Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கு சேர்ந்த மறுநாளே பெண்ணை கொன்ற 19 வயது இளைஞர்.. ஒருசில மணி நேரத்தில் பிடித்த போலீஸ்..!

Mahendran
வியாழன், 14 மார்ச் 2024 (15:33 IST)
மும்பையில் 19 வயது இளைஞர் ஒருவர் நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் வேலைக்கு சேர்ந்த நிலையில் அந்த வீட்டின் முதலாளி பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பையில் உள்ள முகேஷ் என்பவர் தனது மனைவி ஜோதியுடன் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டில் 19 வயது கண்ணயா குமார் என்பவர் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தார். இவருடைய தந்தை பக்கத்து வீட்டில் வாட்ச்மேன் ஆக வேலை செய்வதை எடுத்து இவரை வேலைக்கு சேர்த்துக் கொண்டதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் வேலைக்கு சேர்ந்த கண்ணயா குமார் அடுத்த நாளே ஜோதியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து அவருடைய மொபைல் போனை ட்ராக் செய்தபோது அவர் பீகார் செல்லும் ரயிலில் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து ரயில்வே துறை போலீசாருக்கு தகவல் கொடுத்து ரயில் நிறுத்தப்பட்டு கண்ணயா குமார் கைது செய்யப்பட்டார். அவரை மும்பை அழைத்து வந்து தற்போது விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வேலைக்கு சேர்ந்த மறுநாளே 19 வயது இளைஞர் கொலை செய்ததை ஒரு சில மணி நேரங்களில் போலீசார் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments