Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் 18 எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை.. திமுக கலந்து கொள்ளுமா?

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (07:53 IST)
டெல்லியில் 18 எதிர்கட்சிகளின் தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை செய்ய இருக்கும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்பிக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்களை கூச்சல் குழப்பம் காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் அதானி விவகாரம் குறித்து குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்பதால் அடுத்த கட்டமாக அவசர ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ளனர். 
 
இன்று டெல்லியில் 18 எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அதானி விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்த ஆலோசனை செய்ய இருப்பதாகவும் குறிப்பிடுகிறது. இந்த கூட்டத்தில் திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு, கனிமொழி உட்பட ஒரு சிலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments