16 மாத குழந்தையிடமிருந்து உடல் உறுப்பு தானம் பெற்றதில், இரண்டு பேருக்கு புத்துயிர் கிடைத்ததாக வெளிவந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 16 மாத பெண் குழந்தை, உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மார்ச் 1ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தது. இதனை அடுத்து, மருத்துவ குழு பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்த ஆலோசனை வழங்கியது. பெற்றோர் அதை ஏற்றுக்கொண்டதால் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அனுமதி வழங்கினர்.
இதனை அடுத்து, மருத்துவர்கள் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்து, குழந்தையின் கல்லீரலை அகற்றி, டெல்லியில் கல்லீரல் செயல் இழப்பால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு பொருத்தினர். அதேபோல், குழந்தையின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
இதன் மூலம், இரண்டு பேருக்கு தற்போது புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் குறித்த தகவலை மருத்துவர்கள் பிறருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.