Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் அமித்ஷா வருகையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு

Webdunia
திங்கள், 22 மே 2023 (15:25 IST)
அசாம் மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதையொட்டி அதன் தலைநகரில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் முதல்வர்  ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் நிலையில், அம்மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அங்கு சில தனி நபர்களும், குழுக்களும் போராட்டம் நடத்தி அமைதியைச் சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின்படி, மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு  நீடிக்கும் என்று போலீஸ் கமிஷனர் பரா கூறியுள்ளார்.

மேலும், அசாமில் 2 நாள் பயணமாக வருகை தரும் அமைச்சர் அமிஷ் ஷா, அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 45 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கவுள்ளார். அத்துடன், தேசிய தடவியல் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments