டெல்லியில் உள்ள நாடாளுமன்ற சாலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் நடத்த திட்டமிட்டுள்ள பேரணிக்கு சிக்கல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி நாடாளுமன்ற சாலையில் நாடாளுமன்றம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை 18 கட்சி எம்பிக்கள் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்ற சாலை யில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சி பேரணி சென்றால் அதை தடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்ற சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.