குஜராத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 14 மாத குழந்தை ஒன்று பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராம்நகரில் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி குஜராத்தைச் சேர்ந்த 14 மாதக் குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைக்கு கடந்த 2 நாட்களாக வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அந்த குழந்தை இறந்துள்ளது.
இறந்த குழந்தையின் பெற்றொர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ராம்நகரில் உள்ள துறைமுக தொழிற்சாலைகளில் வேலை செய்துவந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவமானது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 5351 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.